பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிம்ஸ்டெக் அமைப்பின் கடல்சார் பாதுகாப்புப் பயிற்சி தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2026 3:38PM by PIB Chennai

பிம்ஸ்டெக் அமைப்பின் கடல்சார் பாதுகாப்புப் பயிற்சி, 2026 அக்டோபர் 30 முதல் நவம்பர் 03 வரை நடைபெறுகிறது. பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஒரு அமைந்துள்ளது.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் இந்தப் பயிற்சி, வங்காள விரிகுடாவில் மண்டல அளவிலான பாதுகாப்பு, நிலைத்தன்மை வளமையான உறுப்பு நாடுகளின் பகிரப்பட்ட உறுதியான நிலைப்பாட்டை வலுவடையச் செய்கிறது.

வளமான, மீள்திறன் கொண்ட, தடையற்ற என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் முடிவுகளின் அடிப்படையில், இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் நாடுகளிடையே கடல்சார் ஒத்துழைப்பு, செயல்பாட்டு இணைப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு நடைமுறை சார்ந்த கட்டமைப்பை வழங்குகிறது.

இது பரஸ்பர கடல்சார் நலன் சார்ந்த பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலமும், மண்டல அளவிலான பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலமும், “பார்வையைச் செயலாக மாற்றுவதற்கான” பிம்ஸ்டெக்கின் கூட்டுத் தீர்மானத்தைப் பிரதிபலிக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330850®=3&lang=1

(Release ID: 2330850)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330968) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese