மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஆன்மீக மறுமலர்ச்சி, சமூக மாற்றம், நாட்டைக் கட்டமைப்பதில் காயத்ரி பரிவார் அமைப்பின் பங்களிப்பிற்கு மக்களவைத் தலைவர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2026 1:32PM by PIB Chennai

இந்தியாவின் ஆன்மீக மறுமலர்ச்சி, சமூக மாற்றம், நாட்டைக் கட்டமைப்பதில், காயத்ரி பரிவார் அமைப்பின் ஆன்மீக ஆளுமைகளான ஆச்சார்ய ஸ்ரீ ராம் சர்மா, மாதா பகவதி தேவி ஆகியோர் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியுள்ளதாக மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்தார்.

புதுதில்லியில், காயத்ரி பரிவார் ஏற்பாடு செய்திருந்த நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய அவர், மதிப்புமிக்க ஆன்மீக ஆளுமைகளான ஆச்சார்ய ஸ்ரீ ராம் சர்மா, மாதா பகவதி தேவி  ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த நூற்றாண்டு விழா என்பது கடந்த காலத்தை நினைவுகூரும் நிகழ்வாக மட்டுமின்றி, நாடு முழுவதும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு ஆக்கபூர்வமான இயக்கத்தைக் கொண்டாடும் நிகழ்வு என்று அவர் குறிப்பிட்டார்.

ஆச்சார்ய ஸ்ரீ ராம் சர்மா, அகண்ட ஜோதி எனும் ஆன்மீக இதழின் மூலம், நாடு முழுவதும் ஆன்மீக ஒளியைப் பரப்பியதாகவும், தனிமனித மேம்பாடு, குடும்ப, சமூக மேம்பாடு, தேசக் கட்டமைப்பு ஆகிய கொள்கைகளின் மூலம் மக்களை ஊக்குவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

 

"நம்மை மாற்றிக்கொண்டால், காலமும் மாற்றமடையும்" என்ற அவரது உத்வேகம் அளிக்கும் உறுதிமொழி, இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு, ஒரு வழிகாட்டும் கொள்கையாக மாறியுள்ளது. காயத்ரி மந்திரம், யக்ஞங்கள் மூலம், ஆச்சார்ய ஜி மக்களை ஆன்மீக உணர்வுடன் இணைத்து, அகத்தூய்மைக்கும், ஆன்மீக விழிப்புணர்வுக்கும் வழிவகுத்தார் என்று அவர் கூறினார்.

காயத்ரி பரிவார் அமைப்புடனான தனது தனிப்பட்ட தொடர்பை நினைவு கூர்ந்த அவர், ஆச்சார்ய ஸ்ரீ ராம் சர்மாவின் ஆன்மீகத் தத்துவத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்தை, தொலைதூர கிராமங்களிலும், சிறு கிராமங்களிலும் நேரில் கண்டதாகக் கூறினார்.இந்தத் தத்துவம், கடினமான சூழ்நிலைகள், மூடநம்பிக்கைகள், தீய சமூக நடைமுறைகளை முறியடிக்க மக்களுக்கு உதவியுள்ளது. இந்த இயக்கம் மக்களின் சமூக வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி, நற்பண்புகளை வளர்த்தல், சமூகம், நாட்டின் மீதான ஆழ்ந்த பொறுப்புணர்வை உருவாக்குவதற்கும் பங்களித்துள்ளது என்று திரு ஓம் பிர்லா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330789®=3&lang=1

(Release ID: 2330789)

****

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330920) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati