இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2026 11:33AM by PIB Chennai
தற்சார்பு நிலையிலான பஞ்சாயத்து அமைப்புகளை உருவாக்குவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லியில் அக்டோபர் 30, 2026 அன்று நடைபெற்ற மக்கள் திட்டமிடல் பிரச்சாரம் குறித்த தேசியப் பயிலரங்கில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்சார்பு பெற்ற பஞ்சாயத்து அமைப்புகள், வளர்ச்சியடைந்த பஞ்சாயத்து அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கும் முயற்சிகளில், அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
பிரதமரின் வளர்ச்சியடைந்த கிராம தன்னாட்சித் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு குறித்து திரு ராஜீவ் ரஞ்சன் சிங் எடுத்துரைத்தார்.
இந்தப் பயிலரங்கில், நாடு முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மக்கள் திட்டமிடல் பிரச்சாரம் 2026-27 என்ற கையேடு (ஆங்கிலம்/இந்தி மொழிகளில்) வெளியிடப்பட்டது.
மேலும், நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கான நிலங்களில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், பேட்டரி மாற்றும் நிலையங்களை அமைப்பதற்காக, மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எனர்ஜி எஃபிஷியன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்துடன், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330751®=3&lang=1
(Release ID: 2330751)
****
SS/SV/SH