பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப்பிரிவு இலங்கையின் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 11:27AM by PIB Chennai

இந்திய கடற்படையில் முதலாவது பயிற்சி படைப்பிரிவைச் சேர்ந்த ஐஎன்எஸ் தீர், ஐஎன்எஸ் சுஜாதா, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சாரதி ஆகிய கப்பல்கள் பயிற்சியை நிறைவு செய்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடையே கூட்டுப்பயிற்சி நடைபெற்றது. இந்த கூட்டு கடற்பயிற்சியின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக முதல் பயிற்சி படைப்பிரிவின் மூத்த அதிகாரி இலங்கை கடற்படையின் தளபதியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள், கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பரஸ்பரம், பொதுவான நலனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

தொழில்முறைச்சார்ந்த நடவடிக்கையாக முதல் பயிற்சி படைப்பிரிவில் பயிற்சி பெறுவோர் திருகோணமலையில் உள்ள கடற்படை, கடல்சார் அகாடாமியை பார்வையிட்டனர்.

சமூக நலன் சாரந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்திய கடற்படையைச் சேர்ந்த பணியாளர்கள் கடற்கரையை தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டு சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவித்தனர்.

மேலும் இந்த கப்பல்கள் அந்நாட்டு மக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330320&reg=48&lang=1&_gl=1

 

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330563) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati