மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன் மதிப்புக்கூட்டு நிறுவனங்கள், நடமாடும் சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகள் நாட்டின் உயர் மதிப்பிலான கடல்சார் பொருளாதாரத்தை மாற்றியமைக்கின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 7:55AM by PIB Chennai

நாட்டின் மீன்வளத்துறை, உற்பத்தியை மையமாகக் கொண்ட நடவடிக்கைகளிலிருந்து பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட வலிமையான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் அமைப்பாக உருவெடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை உணவு, ஊட்டத்துசத்து பாதுகாப்பை உறுதி செய்வதுடன் வேலை வாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற வாழ்வாதாரம், ஏற்றுமதி போன்ற வருவாய் ஈட்டும் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மதிப்பு கூட்டுதல், குளிரூட்டப்பட்ட விநியோக நடைமுறைகள், நவீன பதனப்படுத்தும் அமைப்புகள், மீன் வர்த்தகத்திற்கான சந்தைப்படுத்துதல் நடைமுறைகள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்திக்கான சூழல் அமைப்பு குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டுள்ளது.

உற்பத்தி திறன், தர நிலையை உறுதிசெய்தல், அறுவடைக்கு பிந்திய வேளாண் நடைமுறைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பம்,  ட்ரோன் தொழில்நுட்பம், நவீன குளிரூட்டப்பட்ட விநியோக அமைப்புகள், துல்லிய மீன் வளர்ப்பு நடைமுறைகள் போன்றவற்றின் மூலம் இழப்புகள் ஏற்படுவதை குறைத்து அதிக வருவாய் ஈட்டுவதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றன.

நாட்டின் மீன்வளத்துறையை உற்பத்தி சாரந்த நிலையிலிருந்து பன்முகத் தன்மை கொண்ட சந்தை அடிப்படையிலான நிறுவனமாக மாற்றுவதில் மதிப்புக்கூட்டல் நடவடிக்கைகள் முக்கிய காரணியாக உருவெடுத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330291&reg=48&lang=1&_gl=1

***

SS/SV/PS 


(வெளியீட்டு அடையாள எண்: 2330403) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , हिन्दी , Gujarati , Telugu