வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தொழில்முறை சார்ந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல தரம், உற்பத்தியின் அளவு, சர்வதேச சந்தை வாய்ப்புகள் அவசியம்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 3:55PM by PIB Chennai

இந்தியாவின் தொழில்முறை மாற்றம் என்பது தரம்,  உற்பத்தியின் அளவு, உலகளவிலான சந்தை வாய்ப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தொழில்துறை மேம்பாட்டு ஆய்வு நிறுவனம் போன்ற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட, இந்தியாவின் தொழில்முறை மாற்றம் குறித்த நான்காவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அரசு, தனியார் துறை, கல்வித்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த  முயற்சியால் உருவான புத்தாக்கம் இந்த மாற்றத்திற்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

உற்பத்திக்கான மையமாக இந்தியா அங்கீகரிக்கப்படும் வகையில், இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் தொழில் சூழலில் மாற்றத்தை விரைவுபடுத்தக்கூடிய நான்கு முக்கிய காரணிகளாக தரம், உலகளாவிய சந்தை வாய்ப்புகள், உற்பத்தியின் அளவு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் தரநிலைக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்திய குறைபாடற்ற உற்பத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத செயல்முறை என்ற கொள்கையை மீண்டும் நினைவுகூர்ந்தார்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம், சர்வதேச அளவிலான  சந்தை வாய்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் போட்டியிடவும், வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்று திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.                             

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330034&reg=3&lang=1&_gl=1

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330175) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati