இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 12:53PM by PIB Chennai
கங்கை வெள்ளத் தடுப்பு வாரியத்தின் 19-வது கூட்டம் 2026 அக்டோபர் 27 அன்று புதுதில்லி பாரத் மண்டபத்தில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர், நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் கே வி ராஜு, பீகார் துணை முதலைமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான திரு விஜய் குமார் சௌத்ரி, உத்தரப்பிரதேச மாநில ஜல் சக்தி துறை அமைச்சர் திரு சுவதந்த்ர தேவ் சிங் கங்கை படுகை மாநிலங்களின் பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கங்கை படுகை பகுதியில் ஏற்படும் வெள்ளம், மண் அரிப்பு, வடிகால் பிரச்சனை ஆகியவற்றிற்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் திட்டமிட்டுச் செயல்படுத்த மத்திய அரசால் 1972 ஏப்ரல் 18 அன்று கங்கை வெள்ளத்தடுப்பு வாரியம் உருவாக்கப்பட்டது.
தற்போது நடைபெறும் முன்முயற்சிகளை ஆய்வு செய்யவும், மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் பயன்மிக்க வெள்ளத்தடுப்பு மேலாண்மைக்கான புதிய அணுகுமுறைகள் தொடர்பாக விவாதிக்கவும் இந்தக் கூட்டம் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329935®=3&lang=1
***
SS/IR/GS/PS