பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தீவிரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் ஒழிப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது – பாதுகாப்பு அமைச்சர்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 11:25AM by PIB Chennai

கூட்டுப் பிராந்திய பாதுகாப்பு, தீவிரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் ஒழித்தல் ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பிலிப்பைன்ஸின் செபுவில் நடைபெறும் 13-வது ஆசியன் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவின் அனுபவம் என்பது வெறும் பயின்றதாக அல்லாமல் பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பாதுகாப்பு சவால்களை நேரடியாக எதிர்கொண்டதன் மூலம் களத்தில் கடினமாக உழைத்து கிடைத்த அனுபவம் என்று கூறினார். இந்தியாவின் ஒவ்வொரு உத்தியும் சோதிக்கப்பட்டு நிருபிக்கப்பட்டவை என்று தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தீவிரவாத கட்டமைப்புகளை இந்தியா தகர்த்ததையும், அரசு ஆதரவு பெற்ற தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையாக செயல்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார்.

தீவிரவாதத்திற்கு எல்லைகள் கிடையாது என்று சுட்டிக்காட்டிய பாதுகாப்பு அமைச்சர் கூட்டுப்பயிற்சிகள், திறன் மேம்பாட்டுத்திட்டங்கள், திறன்மிக்க உளவுத்துறை பகிர்வு ஆகியவற்றின் மூலம் இந்தியா, தம்முடைய கள அனுபவத்தை ஆசியன் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்குபெறும் நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆசியன் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்ட கட்டமைப்பின் கீழ் தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு  முக்கியப் பகுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2024-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு குறித்த நிபுணர்கள் பணிக்குழுவிற்கு இந்தியாவும், மலேசியாவும் இணைந்து தலைமை தாங்குவதாகவும் பாதுகாப்பு  அமைச்சர் கூறினார்.

ஆசியன் பிராந்தியத்திற்கும் பாதுகாப்பான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, மீள் தன்மையுடைய, விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ-பஃசிபிக் பிராந்தியத்திற்கும் இந்தியா முக்கியத்துவம் அளிப்பதாக திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329874&reg=3&lang=1

***

SS/IR/PS 


(வெளியீட்டு அடையாள எண்: 2330004) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Gujarati , Telugu