பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், ஆசியான் நாடுகளை மையமாகக் கொண்ட, சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்தியா உறுதியுடன் உள்ளது பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 8:23PM by PIB Chennai

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், ஆசியான் நாடுகளை மையமாகக் கொண்ட, சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய   வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் செபுவில் நடைபெற்ற 13வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் திரு சான் சுன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அக்டோபர் 28, 2026 அன்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது என்று அவர் கூறினார்.

இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான, வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடர்புகளையும், உத்திசார் ஒத்துழைப்பையும் இது எடுத்துக் காட்டுவதாகவும், தற்போதைய பாதுகாப்பு முன்னெடுப்புகளை மதிப்பாய்வு செய்யவும், எதிர்கால ஒத்துழைப்புக்கான பகுதிகளை வகுக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள வலுவான முன்னேற்றம் குறித்து இரு அமைச்சர்களும் பரஸ்பரம் தங்களது திருப்தியை வெளிப்படுத்தினர். செயல்பாட்டு ஒருங்கிணைப்பையும், பரஸ்பரப் புரிதலையும் மேம்படுத்தும் நோக்கில், தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை இடையே கூட்டு இராணுவப் பயிற்சிகளின் வரம்பை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் 'கிழக்குக் கொள்கை'யில் சிங்கப்பூர் ஒரு முக்கிய நாடானது திகழ்கிறது என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329765&reg=3&lang=1    

****

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2329843) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , Malayalam , English , Urdu , हिन्दी