புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 6:41PM by PIB Chennai

பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சியை, நவம்பர் 2-ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

2026, 2 முதல் 5 நவம்பர் 2026 வரை மூன்று நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறவுள்ளது

இந்த உச்சி மாநாட்டில், 130-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறை, புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

ஆஸ்திரேலியா, டென்மார்க், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், பிரிட்டன் ஆகியவை இந்தியாவின் நட்பு நாடுகளாகப் பங்கேற்கின்றன.

ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், தில்லி, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பதின்மூன்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்று, தங்களின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல், முதலீட்டு வாய்ப்புகள், உற்பத்தித் திறன்களை வெளிப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329695&reg=3&lang=1   

****

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2329761) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , Assamese , English , Marathi , हिन्दी , Gujarati