இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வகுப்பறையில் தூய்மையான விளையாட்டு மாண்புகளை உருவாக்கும் நோக்கில் யுனெஸ்கோவுடன் விளையாட்டு, கல்வி அமைச்சகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 3:23PM by PIB Chennai

கேலோ பாரத் நிதி 2025 திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விளையாட்டையும், கல்வியையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். அதைத்தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், கல்வி அமைச்சகம், யுனெஸ்கோ ஆகியவை இணைந்து ஒவ்வொரு வகுப்பறையிலும் விளையாட்டு மாண்புகள் குறித்த உபகரணத் தொகுப்பு மூலம் நாடு முழுவதும் உள்ள வகுப்பறைகளுக்கு தூய்மையான விளையாட்டு மாண்புகளை எடுத்துச் செல்லும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டன.

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் இந்திய தூய்மை விளையாட்டு மாநாட்டில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கல்வி, விளையாட்டு, அன்றாட வகுப்பறை செயல்பாடுகள் மூலம் குழந்தைகளிடம் மரியாதை, நேர்மை, ஒருங்கிணைப்பு ஆகிய மாண்புகளை வளர்ப்பதை இம்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் மாணவர்களிடையே நியாயமான விளையாட்டுச் சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த உபகரணத் தொகுப்பின் காணொலிக் காட்சிகள் 13 இந்திய மொழிகளில் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329464&reg=3&lang=1

****

SK/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2329720) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada