சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 2:29PM by PIB Chennai
இளைஞர்களைப் புகையிலை பயன்பாடு, போதைப் பொருளைச் சார்ந்திருப்பதிலிருந்து பாதுகாக்க, நாடு தழுவிய மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய ஆயுஷ்த்துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் அழைப்பு விடுத்தார்.
புதுதில்லியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம், டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில், புகையிலை பயன்பாடு இல்லாத இளையோர் இயக்கத்தின் நான்காம் கட்டப் பணிகளைத் அவர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நாட்டின் இளைஞர்கள் புகையிலை, பிற போதைப் பொருட்களை உறுதியாக நிராகரித்து, ஆரோக்கியமான, நிறைவான, போதைபொருள் பயன்பாடு இல்லாத வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில், இளைஞர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியதத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் இந்த 60 நாள் இயக்கம், இளைஞர்கள் இடையே புகையிலை பயன்பாடுகளைத் தடுப்பதையும், புகையிலை பழக்கத்தைக் கைவிட ஊக்குவிப்பதையும், புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டங்களை வலுப்படுத்துவதையும், நாடு முழுவதும் புகையிலைப் பயன்பாட்டு இல்லாத சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏற்கனவே மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த இயக்கத்தின் மூலம், 5.8 லட்சத்திற்கும் அதிகமான கல்வி நிறுவனங்களும், 73,000-க்கும் மேற்பட்ட கிராமங்களும் புகையிலை இல்லாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329431®=3&lang=1
***
SS/SV/RJ