சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் நகரில் 14-வது சர்வதேச சுற்றுலா சந்தை

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 9:50AM by PIB Chennai

மத்திய சுற்றுலா அமைச்சகம், அருணாச்சலப் பிரதேச மாநில அரசுடன் இணைந்து நடத்தும் 14-வது சர்வதேச சுற்றுலா சந்தை அம்மாநிலத்தின் தவாங் நகரில் 2026 அக்டோபர் 29 முதல் 31 வரை நடைபெறவுள்ளது. வடகிழக்குப் பிராந்தியத்தின் தனித்துவமான சுற்றுலா வாய்ப்புகளை வெளிக்கொணரவும், வணிக நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையிலும் இச்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், சுற்றுலாத்துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இக்கண்காட்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த 43 சர்வதேச வர்த்தகப் பிரதிநிதிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலா தலங்கள், பாரம்பரியக் கலைகள், கைவினைப்பொருட்கள் ஆகியவை இதில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

13 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் நடைபெறும் இந்நிகழ்வு, வடகிழக்குப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329288&reg=3&lang=1

***

SS/PD/GS  


(வெளியீட்டு அடையாள எண்: 2329435) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Bengali , English , Urdu , Assamese , Bengali-TR , Gujarati