சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுங்கச் சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பயனாளர்களுக்கு சலுகை அடிப்படையிலான உள்ளூர் பயண அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 5:51PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சுங்கச் சாவடியிலிருந்து 20 கி மீ தொலைவிற்குள் வசிக்கும் தகுதியுள்ள வர்த்தகப் பயன்பாடு இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு சலுகை அடிப்படையிலான உள்ளூர் பயண அட்டையை மத்திய அரசு  அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய நடைமுறை நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த சலுகை உள்ளூர் பயண அட்டைக்கான ஆண்டு கட்டணம், நகராட்சி அல்லது உள்ளூர் நகரப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள சுங்கச் சாவடிகளுக்கு ரூ1,500 ஆகவும், இந்த எல்லைகளுக்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளுக்கு ரூ3,000 ஆகவும் இருக்கும்.

இந்த புதிய விதிமுறையின் கீழ், 20 கி மீ தொலைவிற்குள் வசிக்கும், செல்லத்தக்க, செயல்படும் பாஸ்டாக் வில்லை வைத்திருக்கும் தகுதியுள்ள வணிகம் அல்லாத வாகன உரிமையாளர்கள், ஒரு குறிப்பிட்ட சுங்கச் சாவடி வழியாகப் பயணிக்க, தற்போதுள்ள மாதாந்திர பயண அட்டை அல்லது சலுகை உள்ளூர் பயண அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

இந்தப் பயண அட்டை அந்தக் கட்டணச் சாவடிக்கு மட்டுமே செல்லத்தக்கது என்றும், வேறு எந்தச் சுங்கச் சாவடிகளுக்கும் மாற்றத்தக்கது அல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பயனர் கட்டண வசூல் முறையின் அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது விரைவுச்சாலைகளில் சலுகை அடிப்படையிலான உள்ளூர் பயண அட்டை கிடைக்காது. மேலும், பயணிகள் பயன்படுத்துவதற்கு சேவைச் சாலை அல்லது மாற்றுச் சாலை இருக்கும் இடங்களிலும் இது வழங்கப்படாது.

வாகனங்களுக்கான வருடாந்திர உள்ளூர் பயண அட்டை, தகுதியான சுங்கச்சாவடிகளில் நவம்பர் 1 முதல் கிடைக்கும். இந்த பயண அட்டை, ராஜ்மார்க்கயாத்ரா செயலி  மூலமாகவும் டிசம்பர் 1-ம் தேதி  முதல் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329077&reg=3&lang=1

(Release ID: 2329077)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329227) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Odia