பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – இந்தோனேசியா கூட்டுச் சிறப்புப் படைகள் பயிற்சியான கருடா சக்தி இந்தோனேசியாவில் தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 3:41PM by PIB Chennai

இந்தியா – இந்தோனேசியா இடையேயான கூட்டுச் சிறப்புப் படைகள் பயிற்சியான கருடா சக்தியின் 11-வது பதிப்பு இந்தோனேசியாவின் பேன்யூவாங்கியில் தொடங்கியது.

இப்பயிற்சி 2026 அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியக் குழுவில் பாராசூட் படைப் பிரிவின் (சிறப்புப் படைகள்) வீரர்களும் இந்தோனேசியக் குழுவில் இந்தோனேசியச் சிறப்புப் படை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இரு நாடுகளின் சிறப்புப் படைகளுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றை வலுப்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும். இப்பயிற்சியில் தடை தாண்டுதல், போர் களத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுதல், மலையேறுதல், வான்வழி தாக்குதல் பயிற்சி, போர் பயிற்சிகளை வலுப்படுத்துதல் உட்பட வனம் சார்ந்த சூழல்களில் சிறப்பு நடவடிக்கைகளுக்கான உத்திகள், நுட்பங்கள், செயல்முறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அத்துடன் ஆயுதங்கள், உபகரணங்கள், செயல் நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம், தகவல் பரிமாற்றம் ஆகியவையும் இப்பயிற்சியில் இடம்பெறும்.

இக்கூட்டுப் பயிற்சியானது இரு குழுக்களின் ஒருங்கிணைப்பு போன்றவற்றின்  மதிப்பீட்டு பயிற்சியுடன் நிறைவடையும்.

இப்பயிற்சி இந்தியா – இந்தோனேசியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328954&reg=3&lang=1

***

SS/IR/SM/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2329136) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese