பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கு, குறைந்த செலவில், உயர்தரத் தொழில்நுட்பங்கள், வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மேம்பட்ட விநியோக நடைமுறைகள் அவசியம்: மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 5:32PM by PIB Chennai

பாதுகாப்புத் துறையில் இரண்டாம் கட்ட தற்சார்பு நடவடிக்கைகளுக்கு அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அழைப்பு விடுத்துள்ளார்.

புதுதில்லியில் இன்று (26-10-2026) நடைபெற்ற, இந்தியக் கடற்படையின் கடற்படை புத்தாக்கம், உள்நாட்டுமயமாக்கல் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, தொழில்நுட்ப மேன்மையை அடைவதற்காக, உயர்தர, அதிநவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடக்கைகளை வலுப்படுத்துதல், மீள்திறன் கொண்ட விநியோக நடைமுறைகளைக் கட்டமைத்தல் போன்ற அம்சங்களுக்கு  முக்கியத்துவம் அளித்து, அதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அடைந்துள்ள தற்சார்பு நடவடிக்கைகளின் முதல் கட்ட வெற்றிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

கடந்த பத்தாண்டுகளில், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை அடைவதில் உள்ள முன்னேற்றம் குறித்து அவர் எடுத்துரைத்தார். இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம், அடுத்த கட்டத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது என்றும், திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328590&reg=3&lang=1 

***

(Release ID: 2328590)

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2329119) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese