இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2026 3:06PM by PIB Chennai
விளையாட்டில் ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான யுனெஸ்கோ சர்வதேச உடன்படிக்கையின் கீழ், புதுதில்லியில் நடைபெற்ற சிஓபி10 அமைப்பின் மூன்றாவது முறைசார் கூட்டத்திற்கும் 2026-27-ம் ஆண்டிற்கான நிதியத்தின் ஒப்புதல் குழுவின் நான்காவது முறைசார் கூட்டத்திற்கும் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமைத் தாங்கினார்.
அப்போது பேசிய டாக்டர் மாண்டவியா, நேர்மையான விளையாட்டுச் சூழலை உருவாக்குவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். விளையாட்டில் சிறந்து விளங்குவது என்பது எப்போதும் நேர்மையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தியா உறுதியுடன் நம்புவதாக தெரிவித்தார். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். வெற்றி என்பது தடைசெய்யப்பட்டப் பொருட்கள் அல்லது முறைகளால் அல்லாமல் திறமை, தயார்நிலை, கடினஉழைப்பு ஆகியவற்றின் மூலமே தீர்மானிக்கப்படவேண்டும் என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி நேர்மையான விளையாட்டுச் சூழலை வலியுறுத்துவதுடன் ஊக்கமருந்து பயன்பாடு என்ற தீமைக்கு எதிராக செயல்படும் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருதாக தெரிவித்தார்.
தேசிய ஊக்கமருந்து பயன்பாடு தடுப்புச் சட்டம் 2022, பின்னர் 2025-ம் ஆண்டு அது திருத்தப்பட்டதன் மூலம் இந்தியாவின் ஊக்கமருந்து பயன்பாடு தடுப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328940®=3&lang=1
***
SS/IR/SM/SU