சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அறிவியல்பூர்வ பல்லுயிர் நிர்வாகத்தில், தேசிய அளவிலான செயலாக்க வழிமுறைகள் அவசியம்: மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 2:13PM by PIB Chennai

பல்லுயிர்ப் பாதுகாப்பு, இயற்கையுடன் இயைந்து வாழ்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்மீனியாவின் ஏரெவனில் நடைபெற்ற பல்லுயிர் பன்முகத்தன்மைக்கான மாநாட்டின் 17-வது உயர்நிலை அமர்வில், இந்தியாவின் சார்பில் தேசிய அறிக்கையை அமைச்சர் சமர்ப்பித்தார்.

இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த ஆர்மீனிய அரசிற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

குன்மிங்-மான்ட்ரியல் சர்வதேச பல்லுயிர் கட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தேசிய முன்னுரிமைகள், சூழலமைப்பு, சட்டங்கள் ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும் என்றும், போதுமான நிதியுதவி, திறன் மேம்பாடு, தொழில்நுட்பப் பரிமாற்றம் போன்றவற்றில் வளர்ச்சியடைந்த நாடுகள் உதவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு வழிமுறைகள் மூலம், மரபணு வளங்கள் குறித்த தரவுகளிலிருந்து கிடைக்கும் பலன்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்தியா ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

செயற்கை உயிரியல், உயிரிப் பாதுகாப்பிற்கான அறிவியல்பூர்வ, இடர் விகிதாசாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை அணுகுமுறையை அமைச்சர் பரிந்துரைத்தார். இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் பாதுகாப்பு உத்தி, செயல்திட்டம், உலகளவில் பல்லுயிர் பாதுகாப்பு கட்டமைப்பை, 23 தேசிய பல்லுயிர் பாதுகாப்பு இலக்குகள் மற்றும் 142 குறியீடுகளை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

பல்லுயிர் பாதுகாப்பில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த அமைச்சர், நாட்டில் 1,134 பாதுகாக்கப்பட்ட பகுதிகள், 103 ராம்சார் தளங்கள், 57 பல்லுயிர் பாரம்பரிய தளங்கள், 18 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328896&reg=3&lang=1     

***

(Release ID: 2328896)

SS/SV/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2329076) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam