தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பணி, பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அறிவுரையை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 2:18PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையம் பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அறிவுரையை 10 மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், ரயில்வே வாரிய தலைவர், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு அளித்துள்ளது.

பெண்களின் உரிமையைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பணியிடங்களிலும், பொது இடங்களிலும் அவர்களுடையப் பாதுகாப்பு கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட காலமுறை தொழிலாளர் பங்களிப்பு ஆய்வின்படி, 2026 செப்டம்பரில் தொழிலாளர்களில் பெண்களின் பங்களிப்பு 34.6 சதவீதமாக இருந்தது. அதேவேளையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2026-ம் ஆண்டு அறிக்கையின்படி பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் சுமார் 4.4 லட்சமாக பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தொடர்ந்து நீடிக்கும் சவால்களை உணர்த்துவதுடன் ஒருங்கிணைந்த, தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்பதையும் வலியுறுத்துகின்றன.

பெண்களுக்கான நீதி, சம வாய்ப்புகள் குறித்த அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்ய அவர்களுடைய பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328904&reg=3&lang=1

***

SS/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2329069) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Gujarati , Urdu , हिन्दी , Malayalam