ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீர்வளத் துறையின் முன்முயற்சிகள், திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 OCT 2026 10:56AM by PIB Chennai

மத்திய நீர்வள அமைச்சகம், அதன் பல்வேறு பிரிவுகள், அமைப்புகளின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், நிகழ்ச்சிகள், முன்முயற்சிகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து சம்மந்தப்பட்ட துறை தலைவர்களுடன் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் வெள்ளத் தடுப்பு மேலாண்மை பிரிவு, ஃபராக்கா தடுப்பணைத் திட்டம், தேசிய நீர்வள இயக்கம், நீர் மேலாண்மையை நவீனமயமாக்கல், தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம், கென் – பெட்வா இணைப்புத் திட்ட ஆணையம், பிரம்மபுத்திரா – பாரக் ஆற்று விவகாரங்கள், பிரம்மபுத்திரா வாரியம், சிறு பாசன புள்ளியியல், தேசிய நீரியல் நிறுவனம் ஆகியவை தாங்கள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த விரிவான விளக்கங்களை அளித்தன.

இக்கலந்துரையாடலின் போது வெள்ளத் தடுப்பு மேலாண்மை எல்லைப்பகுதி திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், ஃபராக்கா தடுப்பணைத் திட்டத்தில் தடுப்பணை கதவுகளை மாற்றுதல், அரிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பணிகள், அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள், தேசிய நீர்வள இயக்கத்தின் முதன்மை செயல்பாடுகள், கென் – பெட்வா இணைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலை, பிரம்மபுத்திரா வாரியத்தால் தயாரிக்கப்படும் முதன்மைத் திட்டங்கள், விரிவான திட்ட அறிக்கைகளின் முன்னேற்றம், சிறு பாசன புள்ளிவிவர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நான்கு கணக்கெடுப்புகளின் முன்னேற்றம், தேசிய நீரியல்  நிறுவனத்தின் முக்கியத் திட்டங்கள், செயல்பாடுகளுக்கான இலக்குகள், அவற்றின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328810&reg=3&lang=1

***

SS/IR/SM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2328878) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Gujarati