PIB Backgrounder
azadi ka amrit mahotsav

தேசிய அளவில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு குறித்த பார்வை

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2026 11:14AM by PIB Chennai

மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை தேசிய அளவில் மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. அந்த வகையில், பல்வேறு திட்டங்களின் கீழ், மழைநீரை சேகரிப்பது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, நீர்நிலைகளைப் பாதுகாப்பது குறித்து நிறுவனங்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  வீடுகள், பொது இடங்கள், பணியிடங்களில் மழைநீரை சேகரிப்பது, கிணறுகள் அமைத்து மழைநீரை சேகரித்தல், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை சீரமைத்தல், பாரம்பரிய கிணறுகள், நீர்நிலைகளை மீட்டெடுத்தல், குளங்களை தூர்வாருதல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல் மூலம் மழைநீரை சேகரிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பங்கேற்கும் நீர்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் நிலத்தடி நீரை சேகரிப்பது, தண்ணீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்களின் பங்களிப்புடன், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், புதிதாக நீர் சேகரிப்பு கட்டமைப்பு 1.55 கோடிக்குமேல் உருவாக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளிலும் அதை மீட்டெடுக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், சிறந்த பங்களிப்பு  செய்தவர்களுக்கு தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு பணிகள் நடைபெற்றன.

ஜல் சக்தி அபியான் திட்டங்கள் மூலம், 256 மாவட்டங்களில், நீர் பற்றாக்குறை உள்ள 1592 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 2021 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நிலத்தடி  நீரை பாதுகாப்பது, நீர்நிலைகளை சீரமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.  குறிப்பாக, மழைநீர் சேகரிப்பு பணியில் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்ததாகவும், நீர்நிலைகள் பாதுகாப்பு, நீர்நிலைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகித்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் ஆற்றல் மையங்கள் மூலம், மழைநீர் சேகரிப்பு குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, மழைநீர் சேகரிப்பு குறித்த தொழில்நுட்ப அம்சங்கள், தொழிநுட்ப ரீதியிலான வழிகாட்டுதல்கள், தண்ணீர் சேகரிப்புக்கான திட்டமிடல் மற்றும் அதை செயல்படுத்தும் அம்சங்களுக்கு வழிகாட்டியாக நீர் ஆற்றல் மையங்கள் அமைந்தன.

சமூக பங்களிப்பின் வாயிலாக, மழைநீரை சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேகரிப்பு மேலாண்மை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமூகத்தால் செயல்படுத்தப்படும் இயக்கமாக இது மாறியுள்ளது. மழைநீர் சேகரிப்பை அறிவியல் பூர்வமாக திட்டமிடல், நீர்நிலைகள் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவை, மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பருவநிலை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பங்கேற்கும் நீர்பாதுகாப்பு திட்டம், ஜல் சக்தி அபியான் திட்டம், நீர் ஆற்றல் மையங்கள் மூலம் மழைநீர் சேகரிப்பை மத்திய அரசு அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.    

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328335&reg=3&lang=1

***

SS/LN/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2328710) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati