இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 2:16PM by PIB Chennai
சிபிஎஸ்இ மற்றும் சகோதயா பள்ளிகள் சார்பில், “பள்ளியில் இருந்து பணிக்கு உயர்வது” என்ற தலைப்பிலான தேசிய மாநாடு புதுதில்லியில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பள்ளி மாணவர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தயாராவது, அதற்கான திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில் உரையாற்றிய சிபிஎஸ்இ தலைவர் திரு அனில்குமார், எதிர்காலத்தில் மாணவர்கள் பணிக்கு தயாராகும் வகையில், தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, சிந்தனை திறன் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார். பள்ளிக்கல்வியில் இருந்து உயர்கல்வி, திறன்மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு தடையற்ற மாற்றம் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328416®=3&lang=1
***
SS/LN/SH