நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற நிர்வாக அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் - நித்தி ஆயோக் உறுப்பினர் திரு ராஜீவ் கௌபா

இடுகை இடப்பட்ட நாள்: 25 OCT 2026 2:15PM by PIB Chennai

2-வது தேசிய நகர்ப்புற மாநாட்டின் நிறைவு விழாவில், நித்தி ஆயோக் உறுப்பினர் திரு ராஜீவ் கௌபா உரையாற்றினார்.   2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு, நகர்ப்புற நிர்வாகம், திட்டமிடல், நிதி ஆகியவற்றில் விரிவான சீர்திருத்தங்கள் தேவை என்பதை அவர் எடுத்துரைத்தார்.

இந்தியாவில் தற்போதைய நகர்ப்புற மாற்றத்தின் அளவை எடுத்துக் கூறிய திரு கௌபா, இந்தியாவின் மக்கள்தொகை இன்னும் அதிகரித்து, 2060-ஆம் ஆண்டு வாக்கில் ஏறத்தாழ 165 கோடியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். 2050-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், நகர்ப்புற மக்கள்தொகை தற்போதுள்ள 50 கோடியிலிருந்து 85 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 2014-க்குப் பிறகு, ஸ்மார்ட் சிட்டி, அம்ருத், பிரதமரின் வீட்டு வசதி திட்டம், தூய்மை இந்தியா, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்ற பல பெரிய திட்டங்கள் மூலம் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாநிலத் தலைநகரங்களிலிருந்து பிற நகரங்களைத் திறம்பட நிர்வகிக்க முடியாது என்றும், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நகர்ப்புற நிர்வாக அமைப்புகள் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நகர்ப்புறத் திட்டமிடல், வீட்டுவசதி குறித்துப் பேசிய திரு கௌபா, தற்போதைய திட்டமிடல் மாதிரியை முழுமையாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328168&reg=3

****

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328199) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , Gujarati , Urdu , English , हिन्दी