இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2026 11:30AM by PIB Chennai
இந்தியக் கடற்படையின் முதன்மை நிகழ்வான 'ஸ்வாவ்லம்பன் 2026', 'புத்தாக்கம் மற்றும் உள்ளூர்மயமாக்கல் மூலம் வலிமை மற்றும் ஆற்றல்' என்ற கருப்பொருளின் கீழ், 2026 அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் நடைபெறும். கடற்படை புத்தாக்கம் மற்றும் உள்ளூர்மயமாக்கல் கருத்தரங்கின் ஐந்தாவது பதிப்பான இந்தக் கருத்தரங்கம், உள்நாட்டுத் தொழில்நுட்பப் புத்தாக்கத்தை மேம்படுத்தவும் இந்தியாவின் பாதுகாப்புத் தன்னிறைவை வலுப்படுத்தவும் முப்படைகள், தொழில்துறை, புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கல்வித்துறை, முதலீட்டாளர்களை ஒன்றிணைக்கும்.
அக்டோபர் 26 அன்று, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கருத்தரங்கின் முக்கிய விருந்தினராகக் கலந்துகொள்வார். பாதுகாப்புத் துறையில் புத்தாக்கம், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்களித்த தொழில்துறை கூட்டாளர்களை அமைச்சர் கௌரவிப்பார்.
2022-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, ஸ்வாவ்லம்பன்,இந்தியக் கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளை இந்தியத் தொழில் மற்றும் கல்வித்துறையின் தொழில்நுட்பத் திறன்களுடன் இணைக்கும் ஒரு தேசியத் தளமாக உருவெடுத்துள்ளது. இந்த முன்முயற்சி, உள்நாட்டுப் புத்தாக்கத்திலிருந்து களத்தில் பயன்படுத்தக்கூடிய செயல்பாட்டுத் திறன்களை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவதையும், கடல்சார் தயார்நிலையையும் தன்னிறைவையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328089®=48&lang=2
***
AD/RB/RJ