பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பதக்கங்கள் வென்ற நிதேஷ் குமார், பிரமோத் பகத் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 7:02PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் (எஸ்எல்3) பிரிவு பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிதேஷ் குமார்,  வெள்ளிப் பதக்கம் வென்ற பிரமோத் பகத் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இரு விளையாட்டு வீரர்களின் இந்தச் சாதனை மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்கள் தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"இந்திய பாரா பேட்மிண்டன் ஜொலிக்கிறது! ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் (எஸ்எல்3) பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நிதேஷ் குமாருக்கும், வெள்ளிப் பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கும் வாழ்த்துகள். இரு விளையாட்டு வீரர்களுக்கும் இது ஒரு அற்புதமான சாதனை. அவர்கள் தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்க்கட்டும்: பிரதமர்".

***

(Release ID: 2327559)

AD/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328068) வருகையாளர் எண்ணிக்கை : 23