இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2026 5:54PM by PIB Chennai
விளையாட்டுத் துறையில், அடிப்படை அளவிலான பங்கேற்பு, பயிற்சி முதல், உயர்நிலையிலானப் போட்டிகள், தலைமைப் பொறுப்புகள் வரை, பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைமத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே வலியுறுத்தினார்.
புது தில்லியில் உள்ள தில்லி லான் டென்னிஸ் சங்க மைதானத்தில், அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் 'ஏஸ் 2032' முன்முயற்சியின் கீழ் நடைபெற்ற, பெண்களுக்கான பயிற்சியாளர் பயிலரங்கில், அவர்கலந்துகொண்டு உரையாற்றினார்.
மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சி, பயிற்சியாளர் கல்வி, திறமையாளர்களைக் கண்டறிதல், உயர்மட்டப் பயிற்சி ஆகியவற்றுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில், டிஎல்டிஏ அமைப்பின் தலைவர் திரு ரோஹித் ராஜ்பால், ஏஐடிஏ பயிற்சி இயக்குநர் திரு கவல்ஜீத் சிங், டேவிஸ் கோப்பை பயிற்சியாளர் திரு அசுதோஷ் சிங், ஏஐடிஏ கௌரவச் செயலாளர் திரு சுந்தர் ஐயர், அதன் பொருளாளர் திரு தினேஷ் அரோரா மற்றும் பயிற்சியாளர் திருமதி ராதிகா கனிட்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328021®=48&lang=2
***
SK/SV/RJ