இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 5:43PM by PIB Chennai
ராணுவத் தளபதிகள் புவிசார் அரசியல், பிராந்திய அளவிலான மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
புதுதில்லியில் அக்டோபர் 23, 2026 அன்று நடைபெற்ற ராணுவத் தளபதிகள் மாநாட்டில் உரையாற்றிய அவர், அடுத்த 20-30 ஆண்டுகளை உள்ளடக்கிய உத்திசார் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நீண்டகால செயல்திட்டங்கள் குறித்த அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், இந்திய ராணுவத்தின் உயர்நிலையில் உள்ள தலைவர்கள், உடனடி மற்றும் புதிதாக எழும் சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக, எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். உத்திசார் நடவடிக்கைகளில் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மாறிவரும் செயல்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப, மாற்றிக்கொண்டதற்காக முப்படைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த திரு ராஜ்நாத் சிங், புதுமையான சிந்தனை, மேம்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் நவீன ஆயுதங்கள் ஆகியவை 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியடையக் காரணமாக அமைந்தன என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327474®=3&lang=1&_gl=1
***
SK/SV/RJ