மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மீன் வளர்ப்பு துறையில் முதலீடு, ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 3:17PM by PIB Chennai

மத்திய பிரதேச மீன்வளத்துறை, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணைந்து, மத்திய பிரதேச மாநிலம், போபாலில், மீன்வள முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மாநாட்டை, 2026 அக்டோபர் 23-ம் தேதி நடத்தின. இந்த மாநாட்டில், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் மோகன் யாதவ்,  மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ராஜன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், மீன்வளர்ப்போர், மீன்கள் ஏற்றுமதியாளர்கள், மீன் தொழிலில் முதலீடு செய்வோர், தொழில்முனைவோர், நிதி நிறுவனங்களை சேர்ந்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மீன்கள் வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள், தரமான மீன்களை இனப்பெருக்கம் செய்வது, மீன்களை சந்தைப்படுத்துவது, ஏற்றுமதி செய்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராஜிவ் ராஜன் சிங், 130க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக குறிப்பிட்டார். மீன்கள் வளர்ப்பதற்கான நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327340&reg=3&lang=1

***

SK/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328036) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi