ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை
azadi ka amrit mahotsav

அக்டோபர் 22-ம் தேதி மும்பையில் தொடங்கிய மூன்று நாள் நிகழ்வான 'இந்தியா கெம்-2026', இன்று (24.10.2026) நிறைவடைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 24 OCT 2026 4:51PM by PIB Chennai

அக்டோபர் 22-ம் தேதி மும்பையில் தொடங்கிய மூன்று நாள் நிகழ்வான 'இந்தியா கெம்-2026', இன்று (24.10.2026)  நிறைவடைந்தது.

வளர்ந்து வரும் உலகளாவிய ரசாயன மையம் என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்தியா கெம் 2026-ன் 14-வது பதிப்பு, உலகளாவிய ஒத்துழைப்புகளை வலுப்படுத்தியதுடன், ரசாயனத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பெட்ரோ ரசாயனத் துறையில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் வழிவகுத்தது.

இந்நிகழ்வின் போது, ​​ ரசாயனம், பெட்ரோ ரசாயனம் ஆகியவை தொடர்பான பல்வேறு சவால்கள் குறித்த வட்டமேசை விவாதங்களும், ஆலோசனைக் கூட்டங்களும், வணிக சந்திப்புகளும், பயனுள்ள கலந்துரையாடல்களும் நடைபெற்றன.

குறிப்பாக ரசாயன, பெட்ரோ ரசாயனத் துறையில் இந்தியாவுடன் வலுவான வர்த்தக உறவைப் பகிர்ந்து கொள்ளும் ஜப்பான், இந்நிகழ்ச்சியின் கூட்டு ஒத்துழைப்பு நாடாக செயல்பட்டது.

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய ரசாயனம், உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் ஆகியோர் முன்னிலையில், மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா மாநாட்டை, 22-ம் தேதி தொடங்கி வைத்தார்.

உலகெங்கிலும் உள்ள தொழில்துறை தலைவர்கள் இந்திய ரசாயனத் தொழில்துறையின் வாய்ப்புகள் குறித்து 3 நாள் மாநாட்டில் விவாதித்தனர்.

இதில் இடம்பெற்ற உலகத் தரம் வாய்ந்த கண்காட்சியில், இத்துறையில் உள்ள முன்னணி இந்திய, உலகளாவிய நிறுவனங்கள், கூட்டாளர் மாநிலங்களான மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் அரங்குகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில் ஜப்பான், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், லத்தீன் அமெரிக்கா, தென் கொரியா, ஆசியான் நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 3 நாட்களில் மொத்தம் 5000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இம்மாநாடு, கண்காட்சிக்கு வருகை தந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்  குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327972&reg=3

****

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328028) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Marathi , हिन्दी