பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப்பிற்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 10:29PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 100 மீட்டர் டி44 பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப்பிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.

400 மீட்டர் ஓட்டத்தில், உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்த நிலையில், தற்போது, வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருப்பது அவரது விளையாட்டுப் பயணத்தை என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கதாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், அவர் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி, இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 100 மீட்டர் டி44 பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப்பிற்கு வாழ்த்துகள்!

400 மீட்டர் ஓட்டத்தில், உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்த நிலையில், இந்த வெண்கலப் பதக்கமும், அவரது விளையாட்டுப் பயணத்தை என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கதாக மாற்றியுள்ளது. அவர் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி, இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கட்டும்: பிரதமர் @narendramodi".

***

(Release ID: 2327740)

AD/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2328017) வருகையாளர் எண்ணிக்கை : 13