குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புதிய கண்டுபிடிப்புகளும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயனளிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 5:45PM by PIB Chennai

புதிய கண்டுபிடிப்புகளும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயனளிக்க வேண்டுமேயன்றி, அவை ஏதேனும் ஒரு நாட்டின் பிரத்யேகச் சொத்தாக இருக்கக்கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், திரு அனில் கே அந்தோணி எழுதிய ‘அட்வான்டேஜ் இந்தியா: ரீஷேப்பிங் தி ஃபியூச்சர் ஃபார் ஆன் ஈக்விடபிள் வேர்ல்ட்’என்ற புத்தகத்தை அவர் இன்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தப் புத்தகத்தை வெளியிட்டதற்காக அதன் ஆசிரியர், ரூபா பப்ளிகேஷன்ஸ்  நிறுவனத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியா அடைந்துள்ள வியக்கத்தகு மாற்றம் குறித்தும், விரைவான மாற்றம் கண்டுவரும் உலகில், இந்தியாவிற்கான வாய்ப்புகள் குறித்தும் இந்தப் புத்தகம் விரிவாக எடுத்துரைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

தொழில்நுட்பம், வர்த்தகம், பொதுக் கொள்கை ஆகிய துறைகளில் தனது  அனுபவங்களைக் கொண்டு, இந்தியாவின் வலிமையையும், உலக அரங்கில், அதிகரித்து வரும் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும் திரு அந்தோணி, இதில் ஆய்வு செய்துள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவின் தனித்துவமான வலிமையைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் நாகரிக பாரம்பரியம், ஜனநாயக மரபுகள், மக்கள் தொகை சார்ந்த சாதகமான சூழல், வளர்ந்து வரும் பொருளாதாரம், வலுவான நிறுவனங்கள், விரிவடைந்து வரும் தொழில்நுட்பத் திறன் ஆகியவை இந்தியாவின் தனித்துவம் வாய்ந்த சிறப்பம்சங்களை எடுத்துரைப்பதாகத் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா மேற்கொண்டுள்ள மாற்றத்திற்கான பயணத்தை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமை நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கல்வி, வீட்டுவசதி, சுகாதாரம், மருத்துவ வசதி, உணவுப் பாதுகாப்புத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள், லட்சக்கணக்கான குடிமக்களின் கண்ணியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் மேம்படுத்தியுள்ளன என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327476&reg=3&lang=1&_gl=1

(Release ID: 2327476)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2327731) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam