இடுகை இடப்பட்ட நாள்:
20 OCT 2026 9:47PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், உயரம் தாண்டும் போட்டி டி47 பிரிவில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ள நிஷாத் குமாரின் சிறப்பான விளையாட்டு திறனுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
நிஷாத் குமாரின் பன்முக திறமையும், சிறந்து விளங்க வேண்டும் என்ற முனைப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கவை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த தேசத்தின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளதாகவும் கூறினார். அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
இது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நிஷாத்தின் அபாரமான விளையாட்டுத் திறன்!
ஆடவர் உயரம் தாண்டும் போட்டி டி47 பிரிவில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற நிஷாத் குமாரின் திறமைக்கு வாழ்த்துகள். ஏற்கனவே நீளம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த நிலையில், தற்போது இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த இந்தியாவின் பாராட்டையும் பெற்றுள்ளார். அவருடைய பன்முகத் திறமை, சிறந்து விளங்க வேண்டும் என்ற முனைப்பு மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவர் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325619®=3&lang=1
***
SS/LN/SH