இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2026 11:44AM by PIB Chennai
மத்திய எஃகு அமைச்சகம், எஃகு இறக்குமதி தொடர்பான பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கான கலந்துரையாடல் கூட்டத்தை 2026 அக்டோபர் 28 அன்று புதுதில்லி நேதாஜி நகரில் உள்ள எஃகு அமைச்சக வளாகத்தில் நடத்தவுள்ளது.
இக்கலந்துரையாடலில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் tech-steel[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விவரங்களை அனுப்பி நேர ஒதுக்கீட்டை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்நிகழ்வு அன்றைய தினம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட நேர இடைவெளிகள் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும். நிர்வாக வசதிக்காகவும் அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பை உறுதி செய்யவும் ஒரு நிறுவனத்திலிருந்து ஒரு பிரதிநிதி மட்டுமே அனுமதிக்கப்படுவார்.
எஃகு இறக்குமதி முறை கண்காணிப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணை விலக்கு தொடர்பான விண்ணப்பங்கள், அது சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்க விரும்பும் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை 2026 அக்டோபர் 26 அன்று மதியம் 12 மணிக்குள் மேற்கூறிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தங்களுக்கான நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327140®=3&lang=1
***
SS/PD/SH