விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக உணவுப் பரிசு அறக்கட்டளையின் கருத்தரங்கில் இந்தியாவின் வேளாண் ஆராய்ச்சியின் சிறப்பை வெளிப்படுத்திய தேசிய வேளாண் அறிவியல் அகாடமி: இந்திய மாணவிக்கு சர்வதேச விருது

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 11:42AM by PIB Chennai

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள டெஸ் மொயின்சில் 2026 அக்டோபர் 20 முதல் 22 வரை நடைபெற்ற நார்மன் போர்லாக் சர்வதேச கலந்துரையாடல் நிகழ்வில், புதுதில்லி தேசிய வேளாண் அறிவியல் அகாடமி இந்தியாவின் வேளாண் ஆராய்ச்சித் திறனை வெளிப்படுத்தியது. இதில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அரங்கில் தேசிய வேளாண் அறிவியல் அகாடமி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் முக்கிய வெளியீடுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற சர்வதேச இளைஞர் நிறுவன மாநாட்டில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் பங்கேற்று உணவுப் பாதுகாப்பு சார்ந்த தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில், மாணவி அமீனா நஸ்ரீன் சர்வதேச இளைஞர் நிறுவன விருதையும், 500 அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசையும் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

வேளாண் உயர்கல்வி தொடர்பான வட்டமேஜை மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய தேசிய வேளாண் அறிவியல் அகாடமியின் தலைவர் டாக்டர் எம் எல் ஜாட், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வேளாண் உயர்கல்வியில் சர்வதேச கூட்டாண்மைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் வேளாண் ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் வேளாண் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்துடன் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327138&reg=3&lang=1

***

SS/PD/SH   


(வெளியீட்டு அடையாள எண்: 2327550) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Punjabi , Gujarati , Urdu , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR