விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருத்தி தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான கையுறைகள் தொடர்பாக செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் ஐசிஏஆர்-சிர்காட் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 3:34PM by PIB Chennai

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் மும்பையில் செயல்படும்  மத்திய பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான ஐசிஏஆர் - சிர்காட் (ICAR-CIRCOT), தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள டிரஸ்ட் ஏஆர்எஸ் ரப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன், பருத்தி பறிக்கும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கையுறைகள் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்காக, 2026 அக்டோபர் 22 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்தத் தொழில்நுட்பப் பரிமாற்றமானது, கையுறைகளின் வணிகமயமாக்கலை எளிதாக்கி, அவை பரவலாகக் கிடைப்பதை உறுதிசெய்து, பருத்தி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம், இந்த முன்முயற்சியானது கை காயங்களைக் குறைப்பதையும், பணிச்சூழலை மேம்படுத்திவதையும், பாதுகாப்பான அறுவடை முறைகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பருத்தி சார்ந்த விவசாயத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327349&reg=3&lang=1

***

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327526) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese