பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப்படையின் என்சிசி பிரிவு மாணவியுடன் விமானப்படைத் தளபதி பயிற்சிப் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2026 3:20PM by PIB Chennai

விமானப்படைத் தலைமைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், அக்டோபர் 20, 2026 அன்று துண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியில், தேசிய மாணவர் படையைச் (என்சிசி) சேர்ந்த சீனியர் விங் மாணவி ஜக்குலா தேஜஸ்வி ரெட்டியுடன் விமானப் பயணம் மேற்கொண்டார்.

விமானப் பயணத்திற்கு முந்தைய தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, அந்தப் பயிற்சி மாணவிக்கு விமானி அறை அறிமுகம், பாதுகாப்பு விளக்கங்கள், வெளியேறும் செயல்முறை ஆகியவை விளக்கப்பட்டதுடன், மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.  விமானப் பயணத்தின்போது, ​​விமானப் படைத் தளபதி, பல்வேறு விமான உத்திகள், பறக்கும் கோணங்கள், செங்குத்தான திருப்பங்கள் போன்றவற்றை விளக்கினார். தமது வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை அந்தப் பயிற்சி மாணவிக்கு அவர் வழங்கினார்.

இந்தப் பயிற்சி, மாணவி தேஜஸ்விக்கு விமானப் போக்குவரத்து குறித்த நடைமுறை அனுபவத்தை வழங்கியதுடன், விமானியாக வேண்டும் என்ற அவரது லட்சியத்துக்கு ஊக்கமளித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327341&reg=3&lang=1

***

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327522) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Gujarati