விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பண்ணை பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 8:48PM by PIB Chennai

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில், நாடு தழுவிய பண்ணை பாதுகாப்புத் திட்டத்தை இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள், பல்வேறு வேளாண் நிறுவனங்களிலிருந்து காணொலி வாயிலாக இணைந்த லட்சக்கணக்கான விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், அதிகாரிகளிடையே உரையாற்றிய அமைச்சர், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் சமநிலையற்ற பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தவறினால், காலப்போக்கில் பூமி பயிர்களை விளைவிக்க மறுத்துவிடும் என்றும், மனித உடல் நோய்களின் பிறப்பிடமாக மாறிவிடும் என்றும் எச்சரித்தார்.

சர்வதேச சந்தைகளில் உரங்களின் விலை உயர்ந்தபோதிலும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள் மீது கூடுதல் நிதிச் சுமை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார். விவசாயிகள் தொடர்ந்து ஒரு மூட்டை யூரியாவை வெறும் ரூ.266க்கும், ஒரு மூட்டை டிஏபி உரத்தை ரூ. 1,350-க்கும் பெற்றுக்கொள்வதை உறுதி செய்ய, மத்திய அரசு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி உர மானியம் வழங்கி வருவாடகை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தியா தற்போது பசுமை அம்மோனியாவைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும், இது எதிர்காலத்தில் உர உற்பத்தியில் நாடு முழுமையான தன்னிறைவை அடைய உதவும் என்றும் திரு சௌகான் நம்பிக்கை தெரிவித்தார்.

மண் வளத்தைப் பாதுகாக்கவும், விவசாய நிலங்களின் உற்பத்தித் திறனைத் தக்கவைக்கவும், மண் வள அட்டைகளின் அடிப்படையில் சமச்சீரான உரங்களைப் பயன்படுத்துதல், பயிர்ச் சுழற்சி முறையின் மூலம் பயிரிடும் சுழற்சியை மாற்றியமைத்தல், குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுதல் ஆகிய  மூன்று முக்கிய நடவடிக்கைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர்  வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326933&reg=3&lang=1

***

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327456) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , Gujarati , Urdu , English , Kannada , Marathi , हिन्दी , Odia