இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 4:40PM by PIB Chennai
'நீர்வள இயக்கம் 2.0' நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உள்கட்டமைப்பு உருவாக்கத்திலிருந்து, செயல்பாட்டுத் திறன், நிலைத்தன்மை, தரமான சேவையை உறுதிப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் திரு அசோக் கே கே மீனா, தெரிவித்தார்.
மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் நான்காவது காணொளி மாநாட்டை இன்று நடத்தியது.
இம்மாநாட்டில் உரையாற்றிய அவர், வெற்றிக்கான உண்மையான அளவுகோல் என்பது வெறும் சொத்துக்களை உருவாக்குவதுடன், நன்கு பராமரிக்கப்படும், நிதி ரீதியாக நிலையான அமைப்புகள் மூலம், கிராமப்புற குடும்பங்களுக்குத் தொடர்ந்து நம்பகமான,பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதில் உள்ளது என்று வலியுறுத்தினார்.
கிராமப்புறப் பஞ்சாயத்துக்களின் தலைமையிலான திட்டமிடல், துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, கிராமப்புற குடிநீர் விநியோக உள்கட்டமைப்பிற்கான நிலையான நிதி ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று திரு அசோக் கே கே மீனா அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326649®=3&lang=1
(Release ID: 2326649)
****
SK/SV/SH