இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 8:10PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் எஃப் 55 வட்டு எறிதல் பிரிவில் சாதனை படைத்து வெண்கலப் பதக்கம் வென்ற கரம்ஜோதிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.10.2026) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவை எவ்வாறு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு அவரது விளையாட்டுப் பயணம் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
"2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் எஃப் 55 வட்டு எறிதல் பிரிவில் கரம்ஜோதி தமது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் படைத்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். விடாமுயற்சி, கடின உழைப்பு , தன்னம்பிக்கை ஆகியவை எவ்வாறு சிறந்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு அவரது விளையாட்டுப் பயணம் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகும்: பிரதமர் நரேந்திர மோடி"
(Release ID : 2326161)
TV/PLM/SH