பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற பர்வீனுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 6:48PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் எஃப் 46 குண்டு எறிதல் பிரிவில், சிறப்பான எறிதலுடன் வெண்கலப் பதக்கம் வென்ற பர்வீனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் பாராட்டத்தக்கவை என்று குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, இந்த வெற்றி எதிர்காலத்தில் இன்னும் பெரிய சாதனைகளை அடைய அவரை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

 

"2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் எஃப் 46 குண்டு எறிதல் பிரிவில், சிறப்பான எறிதலின் மூலம் வெண்கலப் பதக்கம் வென்று பர்வீன் நமக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் பாராட்டத்தக்கவை. இந்த வெற்றி, எதிர்காலத்தில் இன்னும் பெரிய சாதனைகளை அடைய அவரை ஊக்குவிக்கட்டும்: பிரதமர் நரேந்திர மோடி"

 

(Release ID : 2326105)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326772) வருகையாளர் எண்ணிக்கை : 8