இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 5:02PM by PIB Chennai
மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியமும், நியூசிலாந்து சுங்க சேவை அமைப்பும், சரக்கு வர்த்தகத்தின் மின்னணு மூலத் தரவுப் பரிமாற்றம் தொடர்பான ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான சுங்க ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இருதரப்பு வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும் ஒரு முக்கிய படியாக அமைகிறது. நேற்று (2026 அக்டோபர் 20) முதல் நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 2026 அக்டோபர் 19 அன்று , மத்திய மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியத்தின் தலைவர் திரு விவேக் சதுர்வேதி, நியூசிலாந்து சுங்க சேவை அமைப்பின் கட்டுப்பாட்டாளர் திருமதி கிறிஸ்டின் ஸ்டீவன்சன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
திறன் வாய்ந்த, பாதுகாப்பான எல்லை தாண்டிய வர்த்தகத்திற்காக, இந்தியாவும் நியூசிலாந்தும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326043®=3&lang=1&_gl=1
***
SK/PLM/SU