குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பொது நலனுக்காக ஒன்றிணைந்து செயலாற்றும்போது, அரசியல் கருத்து வேறுபாடுகள் தடையாக அமையக்கூடாது: குடியரசு துணைத்தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 22 OCT 2026 1:47PM by PIB Chennai

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இந்திய சட்ட ஆணையம் ஏற்பாடு செய்திருந்த “கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் சட்ட சீர்த்திருத்தங்கள்: தேசிய, மாநில கண்ணோட்டம்” என்ற தலைப்பிலான மாநாட்டை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

அப்போது உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், பன்முகத்தன்மையில் உள்ள ஒற்றுமை என்பதே நாட்டின் வலிமை என்று கூறினார். பொதுவான தேசிய இலக்குகளை நோக்கி செயல்படும் அதே சூழலில், பன்முகத்தன்மையை மதிப்பதில் இந்திய கூட்டாட்சி முறையின் உண்மையான வலிமை இடம்பெற்றுள்ளதாக அவர் குறிபிட்டார்.

கூட்டுறவு, போட்டித்தன்மை கொண்ட கூட்டாட்சி முறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான இந்தியக் குழுவின் தொலைநோக்குப் பார்வை மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஆலோசனை, ஒருங்கிணைப்பு, பகிரப்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

பொது நலனுக்காக ஒன்றிணைந்து செயலாற்றும்போது, அரசியல் கருத்து வேறுபாடுகள் எந்தவிதத்திலும் தடையாக அமையக்கூடாது என்று அவர் கூறினார். 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதில் சட்ட சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு சி பி ராதாகிருஷ்ணன், வலுவான சட்டங்கள் வெளிப்படைத்தன்மைமிக்க நிறுவனங்கள், திறன்மிக்க நிறுவனங்கள், அனைவருக்குமான நீதி ஆகியவை வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.  

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் சட்டக் கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகளாக காலனித்துவ காலத்தை சேர்ந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டதையும், பயன்பாட்டில் இல்லாத 1,700-க்கும் மேற்பட்ட சட்டங்கள் நீக்கப்பட்டதையும் குடியரசு துணைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326519&reg=3&lang=1

***

SS/IR/RJ/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2326684) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Malayalam