சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2026 11:49AM by PIB Chennai
பிரதமரின் திறமையான, செயல்திறன்மிக்க பயனாளிகள் திட்டம், 2020-21-ம் ஆண்டில் மத்திய அரசு தொடங்கிய திட்டமாகும். பட்டியலின வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அறிவிக்கப்படாத பழங்குடியினர், கழிவுப்பொருட்கள் சேகரிப்பாளர்கள் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது இதன் நோக்கமாகும்.
அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படும் இப்பயிற்சி, அவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கும், ஊதியம் பெறக்கூடிய வேலைவாய்ப்பை பெறுவதற்கும் ஊக்குவித்து சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது. இத்திட்டத்தை சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையைச் சேர்ந்த தேசிய பட்டியலின வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், தேசிய தூய்மைப் பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் ஆகியவை செயல்படுத்துகின்றன.
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இந்த நிறுவனங்களுக்கு நிதி அளிக்கிறது. மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் அமல்படுத்தும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களுக்கு திட்ட வழிகாட்டுதல்கள், பணி ஆணை ஆகியவற்றின்படி, பயிற்சிக்கான செலவுகளை இந்நிறுவனங்கள் அளிக்கின்றன.
பயிற்சி நிறைவடைந்தப் பிறகு பயிற்சி நிறுவனங்கள் தாங்கள் பயிற்சி அளித்தவர்களில் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பைப் (ஊதியம் பெறும் வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில்) பெற்றுத்தர வேண்டும். தவறினால் பயிற்சிக்கான செலவில் 30 சதவீதத் தொகையைக் கொண்ட 3-வது தவணை வழங்கப்படாது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2326437®=3&lang=1
***
SS/IR/RJ/SU