பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தேவேந்தர் குமாருக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 9:36PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 ஆடவர் வட்டு எறிதல் எஃப்43/எஃப்44/எஃப்62/எஃப்64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தேவேந்தர் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அவருடைய இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கும் தருணம் என்றும், பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் வளர்ந்து வரும் சிறப்பைக் கொண்டாடக்கூடியது என்றும் குறிப்பிட்டுள்ள திரு மோடி.  எதிர்காலத்திலும் அவர் சிறந்து விளங்க வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 ஆடவர் வட்டு எறிதல் எஃப்43/எஃப்44/எஃப்62/எஃப்64 பிரிவில் சிறந்த செயல்திறனுடன் தேவேந்திர குமார் வெற்றிப் பெற்றுள்ளார். அவருடைய இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கக்கூடிய தருணமாகவும், பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் வளர்ந்து வரும் சிறப்பைக் கொண்டாடக்கூடியதாகவும் உள்ளது.  தங்கப் பதக்கம் வென்ற தேவேந்தருக்கு வாழ்த்துகள்.  எதிர்காலத்திலும் அவர் சிறந்து விளங்க வாழ்த்துகள்".

***

(Release ID: 2325611)

SS/IR/SU/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326131) வருகையாளர் எண்ணிக்கை : 20