பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தேஜல்பென் தாமோருக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
20 OCT 2026 9:09PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 மகளிர் 200 மீட்டர் டி12 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தேஜல்பென் தாமோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் சிறப்பானத் தொடக்கத்துடன் அவர் அறிமுகமாகியிருப்பதை குறிப்பிட்டுள்ள திரு மோடி, இதுபோன்ற பெரிய சர்வதேச அரங்கில் அவர் வெளிப்படுத்திய நம்பிக்கையூட்டக்கூடிய செயல்திறன் அவரது திறமையையும், ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். அவருடைய எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற தமது வாழ்த்துகளை கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:
"தேஜல்பென் தாமோருக்கு சிறப்பான அறிமுகம்!
அவர் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 மகளிர் 200 மீட்டர் டி12 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சிறப்பானத் தொடக்கத்தைக் கண்டுள்ளார். இதுபோன்ற பெரிய சர்வதேச அரங்கில் அவர் வெளிப்படுத்திய நம்பிக்கையூட்டக்கூடிய செயல்திறன் அவரது திறமையையும், ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. அவருடைய எதிர்கால முயற்சிகள் வெற்றிப் பெற மீண்டும் வாழ்த்துகள்".
***
(Release ID: 2325594)
SS/IR/SU/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2326104)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam