பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரீத்தி பாலுக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 8:59PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 மகளிர் 200 மீட்டர் டி35 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரீத்தி பாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

விடாமுயற்சிக்கும், அர்ப்பணிப்புக்கும் சிறந்த உதாரணமாக பிரீத்தி பால் திகழ்வதாக அவர் கூறினார்.  அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திரு மோடி எதிர்காலப் போட்டிகளிலும் இந்தச் சாதனைப் பயணத்தை அவர் தொடர்வார் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

"விடாமுயற்சி, அர்ப்பணிப்புக்கு சிறந்த உதாரணம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026 மகளிர் 200 மீட்டர் டி35 பிரிவில் பிரீத்தி பால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள்! இந்தச் சாதனையை அவருடைய எதிர்காலப் போட்டிகளிலும் தொடரட்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்".

***

(Release ID: 2325592)

SS/IR/SU/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2326067) வருகையாளர் எண்ணிக்கை : 8