இடுகை இடப்பட்ட நாள்:
20 OCT 2026 7:49PM by PIB Chennai
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ் 11 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹிமான்ஷு நந்தலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹிமான்ஷுவின் சிறப்பான நீச்சல் திறனைப் பாராட்டிய திரு மோடி, இந்த வெற்றி, அவரது கடின உழைப்பு, சகிப்புத்தன்மை, ஒழுக்கத்தை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். மேலும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு அவர் தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
"ஹிமான்ஷு நந்தலின் அற்புதமான நீச்சல்திறன்!
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ் 11 பிரிவில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். கடின உழைப்பு, சகிப்புத்தன்மை, ஒழுக்கத்தை அவரது செயல்பாடு வெளிப்படுத்துகிறது. அவருக்கு வாழ்த்துகள்.
அவரது எதிர்கால விளையாட்டுப் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325526®=48&lang=2
***
AD/RB/RJ