இடுகை இடப்பட்ட நாள்:
20 OCT 2026 7:37PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 65 கிலோ பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அசோக்கிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அசோக்கின் விடாமுயற்சியையும், அவரது தன்னம்பிக்கையையும் பாராட்டிய பிரதமர், அவரது சிறப்பான செயல்பாட்டை மெச்சியதுடன், வருங்கால முயற்சிகளில் அவர் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
"அசோக்கின் அபாரமான செயல்பாடு! 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 65 கிலோ பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும் கண்டு பெருமிதம் கொள்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325511®=48&lang=2
***
AD/RB/RJ