பிரதமர் அலுவலகம்
வேளாண் சூரிய சக்தியின் ஆற்றலை எடுத்துரைக்கும் மத்திய அமைச்சர்கள் திரு பிரல்ஹாத் ஜோஷி, திரு சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோரின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 OCT 2026 11:52AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் திரு பிரல்ஹாத் ஜோஷி, திரு சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
அக்கட்டுரையில் வேளாண்மையுடன் சூரிய மின் உற்பத்தியை இணைப்பதன் மூலம் விவசாயிகளின் வருவாயை வலுப்படுத்துவதற்கான வேளாண் சூரிய சக்தியின் ஆற்றல் குறித்து மத்திய அமைச்சர்கள் திரு பிரல்ஹாத் ஜோஷியும், திரு சிவராஜ் சிங் சௌஹானும் எழுதியுள்ளனர். வேளாண் சூரிய சக்தி எவ்வாறு கூடுதல் வருவாயை ஈட்டும் என்றும் எரிசக்திச் செலவுகளைக் குறைத்து பயிர் உற்பத்தித் திறனுக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்தும் இக்கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், பண்ணைகளுக்கு மின்சாரம் அளிப்பது, கிராமப்புறச் செழுமையை மேம்படுத்துவது தொடர்பான ஆழமான கண்ணோட்டத்தையும் அளிக்கிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"வேளாண்மையுடன் சூரிய மின் உற்பத்தியை இணைப்பதன் மூலம் விவசாயிகளின் வருவாயை வலுப்படுத்துவதற்கான வேளாண் சூரிய சக்தியின் ஆற்றல் குறித்து மத்திய அமைச்சர்கள் திரு பிரல்ஹாத் ஜோஷியும், திரு சிவராஜ் சிங் சௌஹானும் எழுதியுள்ளனர். அது எவ்வாறு கூடுதல் வருவாயை ஈட்டும் என்றும் எரிசக்திச் செலவுகளைக் குறைத்து பயிர் உற்பத்தித் திறனுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
பண்ணைகளுக்கு மின்சாரம் அளிப்பது, கிராமப்புறச் செழுமையை மேம்படுத்துவது தொடர்பான ஆழமான சிந்தனையை இது அளிக்கிறது".
***
(Release ID: 2325735)
SS/IR/SU/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325926)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam