பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டோரப் மதனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2026 7:36PM by PIB Chennai

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு கிளாஸ் 1 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டோரப் மதனுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாரா டேபிள் டென்னிஸ் குழுவினர் தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருவதைக் குறிப்பிட்ட திரு மோடி, ஜெஹான் டோரப் மதனின் இந்த வெற்றி அவரது ஆர்வத்தையும் திறமையையும் பறைசாற்றுகிறது என்று கூறினார். மேலும், அவர் வரும் காலங்களிலும் தொடர்ந்து புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்று வாழ்த்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

"இந்தியாவின் பாரா டேபிள் டென்னிஸ் குழுவினர் தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் ஒற்றையர் பிரிவு கிளாஸ் 1 போட்டியில், ஜெஹான் டோரப் மதன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவரது இந்த வெற்றி, அவரது ஆர்வத்திற்கும் திறமைக்கும் சான்றாகும்.

வரும் காலங்களிலும் அவர் தொடர்ந்து பல புதிய வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi"

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325512&reg=48&lang=2

***

AD/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2325923) வருகையாளர் எண்ணிக்கை : 18